சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 15ஆம் நாள் பிற்பகல் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கின்ற அங்கோலா அரசுத் தலைவர் லோரன்சோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் ஷிச்சின்பிங் கூறுகையில் கடந்த ஆண்டு சீன-அங்கோலா தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 40ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம் நடைபெற்றது.
தற்போது இரு நாட்டுறவு சீரான வளர்ச்சி போக்கினை நிலைநிறுத்தி, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை ஆழமாகி, எதார்த்த ஒத்துழைப்பு அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது. இது இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்தார்.
சீன-அங்கோலா உறவின் பன்முக ஆழ்ந்த வளர்ச்சிக்கு இப்பயணம் புதிய இயக்கு ஆற்றலை உட்புகுத்தி, இரு நாட்டு நட்பார்ந்த ஒத்துழைப்பு புதிய முன்னேற்றம் அடைவதைத் தூண்டும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.