இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $4.386 பில்லியன் சரிவு  

Estimated read time 1 min read

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $4.386 பில்லியன் குறைந்து $690.72 பில்லியன் ஆக உள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில், இந்த கையிருப்பு $1.488 பில்லியன் அதிகரித்து $695.106 பில்லியன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய வாராந்திர சரிவுக்கு முக்கியக் காரணம், கையிருப்புக்களின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துகள் (FCA) குறைந்ததுதான் எனக் கூறப்படுகிறது.
வெளிநாட்டு நாணய சொத்துகள் $3.652 பில்லியன் குறைந்து $582.251 பில்லியன் ஆக உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author