உலகின் மிகப்பெரிய பாலைவனம் என அழைக்கப்படும் சஹாரா பாலைவனத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வெள்ளத்தால், பனை மரங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு மத்தியில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சிகள் தான் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.
தென்கிழக்கு மொராக்கோவில் உள்ள சஹாரா பாலைவன பகுதி உலகின் மிகவும் வறண்ட இடங்களில் ஒன்றாகும். மேலும் கோடையின் பிற்பகுதியில் இங்கு மழை அரிதாகவே பெய்யும்.
இந்நிலையில், மொராக்கோ அரசாங்கம் செப்டம்பரில் இரண்டு நாட்கள் பெய்த மழைப்பொழிவு ஆண்டு முழுவதும் மொத்தமாக 250 மில்லிமீட்டருக்கும் குறைவாகக் காணும் பல பகுதிகளில் ஆண்டு சராசரியை விட அதிகமாகப் பெய்ததாகக் கூறியது.