22ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சியின் கையொப்பமிடும் விழா 18ஆம் நாள் சீனாவின் நன் நிங் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் 94 தொழில் திட்டப்பணிகள், “செயற்கை நுண்ணறிவு ப்ளஸ்”தொடர்பான 44 திட்டப்பணிகள், 17 சர்வதேசப் பொருளாதார மற்றும் வர்த்தகத் திட்டப்பணிகள் உட்பட, மொத்தம் 155 திட்டப்பணிகள் கையொப்பமிடப்பட்டன.
“செயற்கை நுண்ணறிவு ப்ளஸ்”தொடர்பான திட்டப்பணிகள், தயாரிப்பு, சேவை, வேளாண்மை, பண்பாடு, சுற்றுலா முதலிய துறைகளுடன் தொடர்புடையவை. அது, சீன-ஆசியான் ஒத்துழைப்புக்குச் செயற்கை நுண்ணறிவின் ஆற்றலை ஊட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
படம்:VCG