வெனிசுலாவில் வானம் ரத்தச் சிவப்பாக மாறிய மர்மம்..

Estimated read time 0 min read

வெனிசுலாவின் வானம் திடீரென ரத்தச் சிவப்பாக மாறியது, அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, வானம் இவ்வளவு விசித்திரமான மற்றும் பயமுறுத்தும் நிறத்தில் மாறியது மக்களிடையே பீதியை கிளப்பியது.

மேலும் பலரும் இதை ஏதோ ஒரு பெரிய இயற்கை பேரிடர் அல்லது அபாயகரமான நிகழ்வின் அறிகுறி என்று சமூக வலைதளங்களில் பதிவிட, இந்தத் தகவல்கள் வைரலாகின. இருப்பினும், வானிலை நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இது குறித்து விளக்கம் அளிக்கும்போது, இது ஏதோ ஒரு விபரீத நிகழ்வு அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதோடு சூரிய அஸ்தமனத்தின் போது வளிமண்டலத்தில் ஏற்படும் ‘ரேலே ஸ்கேட்டரிங்’ எனப்படும் ஒளிச்சிதறல் விளைவே இந்த நிற மாற்றத்திற்கு முதன்மைக் காரணம். நிலநடுக்கத்தினால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட சிறிய மாற்றங்கள், சூரிய ஒளி மேகங்களில் பட்டுச் சிதறும்போது அதிகப்படியான சிவப்பு நிறத்தை பிரதிபலித்ததே இந்த காட்சிக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author