ஷிச்சின்பிங்கின் முன்மொழிவுகள் முக்கியம்: அங்கோலாத் தேசிய பேரவையின் தலைவர்

உலகளவில் தற்போது முன்கண்டிராத மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இத்தகைய மாற்றங்களால் ஏற்படும் சிக்கல்களை எதிர்நோக்க, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 4 முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார்.

இது குறித்து, அங்கோலாத் தேசிய பேரவையின் தலைவர் டி அல்மெய்டா சி.ஜி.டி.எனுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், என்னைப் பொறுத்த வரை, இந்த முன்மொழிவுகள் மிகவும் முக்கியமாக உள்ளன. தற்போது உலகம் எதிர்நோக்கும் அறைகூவல்களுக்கான சரியான விளக்கத்தை அவை வெளிக்காட்டுகின்றன. ஆப்பிரிக்க கண்டம், உலகில் மாசுப் பொருட்கள் வெளியேற்றம் குறைவாக இருந்த பிரதேசங்களில் ஒன்றாகும். ஆனால், இது காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாகும். பலதரப்பு ஒத்துழைப்பு கோட்பாட்டின் கீழ், இந்த அறைகூவல்களைச் சமாளிக்கக் கூடும் என்பதை இது காட்டுகிறது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author