வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 300 பொறியாளர்களுக்கு பதவி உயர்வு..!

Estimated read time 1 min read

தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

“ 2000 முதல் 2002 ஆம் ஆண்டு உதவி பொறியாளர்கள் (மின்னியல்) ஆக பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதியுடைய 379 பொறியாளர்களில் முதற்கட்டமாக 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (மின்னியல்) செயற்பொறியாளர் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பலதரப்பட்ட பொறியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் காலிப்பணிடங்களை நிரப்புவதற்கு ஏதுவாகவும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், தகுதியுடைய பொறியாளர்களுக்கு வெளிப்படையான முறையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, வரலாற்றில் முதன் முறையாக இவ்வளவு பெரிய அளவில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருப்பது மின்வாரிய வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த பதவி உயர்வுகள் அனைத்தும் தகுதி மற்றும் வாரிய விதிமுறைகளின் அடிப்படையில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக பதவி உயர்வுக்காக காத்திருந்த பொறியாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் சீரிய நடவடிக்கை மூலம் தீர்வு கிடைத்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் பணியாளர் நலன் சார்ந்த அணுகுமுறையின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர். இந்த பதவி உயர்வுகள் ஊழியர்களின் மனஉறுதியை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், மின்வாரியத்தின் செயல்திறன் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தையும் மேலும் மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author