சீன மொழியை வெளிநாட்டு நண்பர்கள் கற்றுக் கொள்வதற்கு சீனா வரவேற்பு

ஐ.நாவின் 17ஆவது சீன மொழி தினத்தை முன்னிட்டு, ஐ.நா. தலைமையகமும் பல்வேறு நாடுகளின் கலாசார நிறுவனங்களும் பல்வகை கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன. சீன மொழி மீதான வெளிநாட்டவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பான கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் 16ஆம் நாள் பதிலளிக்கையில், நடப்பாண்டு, சீன மொழி ஐ.நாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டதன் 80ஆவது ஆண்டு நிறைவாகும் என்று கூறினார். உலகளவில் மிக தொன்மையான மொழிகளில் ஒன்றான சீன மொழி வரலாற்றையும் எல்லையையும் கடந்து, “வேற்றுமையில் இணக்கம்”, “இணக்கத்துடன் சகவாழ்வு” போன்ற ஞானத்தை பரவல் செய்து வருகிறது. மேலதிகமான வெளிநாட்டு நண்பர்கள் சீன மொழியைக் கற்றுக் கொள்ளவும், இதன் மூலம் நவீன சீனா பற்றியும் சீன நாகரிகம் குறித்தும் அறிந்து கொள்வதற்கான ஜன்னலைத் திறக்கவும் வரவேற்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author