சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 23ஆம் நாள் முற்பகல், சீனாவின் 15வது ஐந்தாண்டுத் திட்டத்தின் துவக்கம் எனும் சிறப்பு செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீனக் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பாளர் ஒருவர் இதில் எடுத்துக்கூறுகையில், தற்போது, உலகளவில் மிகப் பெரிய உயர்தரமுள்ள கல்வி அமைப்புமுறையை சீனா உருவாக்கியுள்ளது. கல்வி பரவல் விகிதம் மற்றும் கல்வியைப் பெறும் சமத்துவ நிலை உலகில் முன்னணியில் உள்ளது.
சீனாவின் அடிப்படை கல்வி, உயர் வருமானம் கொண்ட நாடுகளின் சராசரியான நிலையை எட்டியுள்ளது.
சீனாவில் உயர் நிலை கல்வியைப் பெற்றுள்ள மக்கள் தொகை 27 கோடியை எட்டியுள்ளது. சீனக் கல்வியின் சர்வதேசச் செல்வாக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.
