உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவு பெற்ற அதிக நிறைந்த சாதனைகள்:பல நாடுகளின் ஊடகங்கள் கருத்து

Estimated read time 0 min read

பிலிப்பைன்ஸ் தி மனிலா டைம்ஸ், நைஜீரியாவின் தி கார்டியன், மெக்சிகோவின் லா ஜோர்னாடா, ஸ்பெயினின் கேடெத்ரா சீனா உள்ளிட்ட ஊடகங்கள் சமீபத்தில் சீனா முன்வைத்த உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவு குறித்து சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டன. இந்த முன்மொழிவு, பல்வேறு நாடுகளின் மக்களுக்கு பயனுள்ள நன்மைகளைக் கொண்டு வருவதால் வெகுவான பாராட்டுகளை பெற்றுள்ளது. வறுமை  ஒழிப்பு, உணவு பாதுகாப்பு, பொது சுகாதாரம், எண்ணியல் பொருளாதாரம், பரஸ்பர இணைப்பு, சூழலியலின் பசுமைமயமாக்கம் உள்ளிட்ட துறைகளில் அதிகமான ஒத்துழைப்புத் திட்டப்பணிகளை இந்த முன்மொழிவு கொண்டு வந்துள்ளது என்று இக்கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்டது.

இது வரை, சுமார் 130 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த முன்மொழிவுக்கு ஆதரவளிப்பதோடு தொடர்புடைய ஒத்துழைப்புகளில் ஈடுபட்டுள்ளன. ஏறக்குறைய 100 நாடுகள், சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகள், சீனாவுடன் முன்மொழிவு ஒத்துழைப்பு ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளன.

You May Also Like

More From Author