சீனாவில் தொலை தொடர்புத் தொழிலின் வருமானம் அதிகரிப்பு

Estimated read time 0 min read

சீனாவில் 5ஜி, ஜிகாபிட்ஸ் ஆப்டிகல் நெட்வொர்க் ஒளியியல் இணையம் உள்ளிட்ட இணையக் கட்டுமானம் மற்றும் பயன்பாடு இடைவிடாமல் முன்னேறி வருகின்றன.

இவ்வாண்டின் முதல் 2 மாதங்களில், தொலை தொடர்புத் துறையின் வருமானம் 29 ஆயிரத்து 500 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.9 விழுக்காடு அதிகமாகும்.

பிப்ரவரி இறுதிவரை, சீனா மொபைல், சீனா யூனிகாம், சீனா டெலிகாம் ஆகிய 3 முக்கிய தொலை தொடர்பு நிறுவனங்களின் இணையச் சேவை, 67.5 கோடி குடும்பங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. செயல்பாட்டிலுள்ள தொலைப்பேசிகளின் எண்ணிக்கை 179.3 கோடியை எட்டியுள்ளது. தொலைப்பேசியின் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ள இணையத் தரவுகள் 5 ஆயிரத்து 539 கோடி ஜிபியை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி இறுதிவரை, சீனாவில் 5ஜி சேவை நிலையங்களின் எண்ணிக்கை 43 இலட்சத்து 25 ஆயிரத்தை எட்டி, செல்லிட தொலை தொடர்பு சேவை நிலையங்களின் மொத்த எண்ணிக்கையின் மூன்றில் ஒரு பகுதிக்கு மேலாக இருந்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author