கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் வாயிலாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை வெள்ளிக்கிழமை(19.9.2025) நடைபெறவுள்ளது என தமிழ்நாடு தனியார் வேலை இணையம் அறிவித்துள்ளது.
இம்முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் கோவை ஜி.என்.மில்ஸ் வழியே அமைந்துள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகம் அருகே உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மைய வளாகத்தில் நடக்கிறது.
இதில் 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் தங்களின் சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்துகொள்ளலாம்.
30க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் 500க்கும் மேல் உள்ள பணியிடங்களை நிரப்ப இதில் கலந்துகொள்ள உள்ளனர். இதில் பங்கேற்க அனுமதி இலவசம். எனவே, முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைதேடுவோா் மற்றும் தனியாா் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.