தல தீபாவளி கொண்டாட போறீங்களா? தாய்லாந்தில் ஒரு மாதத்திற்கு ஃப்ரீ என்ட்ரி..!!

Estimated read time 1 min read

இந்தியர்களுக்காக தாய்லாந்து அரசாங்கம் ஒரு பிரம்மாண்டமான வரவேற்பை ஏற்பாடு செய்துள்ளது. ‘அமேசிங் தாய்லாந்து கிராண்ட் தீவாளி ஃபெஸ்டிவல் 2026’ (Amazing Thailand Grand Diwali Festival 2026) என்ற பெயரில், பேங்காங்க், பட்டாயா மற்றும் ஃபுகெட் ஆகிய நகரங்களில் சுமார் 4 வார காலத்திற்கு தீபாவளித் திருவிழா நடைபெறவுள்ளது. இந்திய தாய்லாந்து வர்த்தக மற்றும் சுற்றுலா சங்கம், தாய்லாந்து சுற்றுலாத்துறை மற்றும் பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

நவம்பர் 3 முதல் நவம்பர் 29 வரை நடைபெறவுள்ள இந்த விழாக்கள் அனைத்திற்கும் கட்டணம் எதுவுமின்றி முற்றிலும் இலவசமாக அனுமதிக்கப்படும். தீபாவளி பண்டிகை தினமான நவம்பர் 8 அன்று முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதாவது, பாலிவுட் இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளக்கேற்றும் சடங்குகள், இந்திய உணவுத் திருவிழாக்கள் மற்றும் கலாச்சாரப் பேரணிகள் இந்த 4 வார விழாவை அலங்கரிக்கவுள்ளன.

2025-ல் 22 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்கு வருகை தந்த நிலையில், 2026-ஆம் ஆண்டில் அதை 25 லட்சமாக உயர்த்த தாய்லாந்து சுற்றுலாத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

பேங்காங்க்

நவம்பர் 3 முதல் 4: ‘சென்ட்ரல் பங்ராக்’ பகுதியில் ‘தி ஃபர்ஸ்ட் லைட்’ என்ற தொடக்க விழா விளக்கேற்றலுடன் தொடங்குகிறது.

நவம்பர் 6 முதல் 8 வரை: ‘ஐகான்சியாம்’ (ICONSIAM) ரிவர்பார்க் பகுதியில் சாவோ பிரயா (Chao Phraya) நதிக்கரையில் ‘லோட்டஸ் பை தி ரிவர்’ விழா நடக்கிறது. தீபாவளியான நவம்பர் 8 அன்று பிரம்மாண்ட நதிக்கரை வானவேடிக்கை இடம்பெறும்.

நவம்பர் 20 முதல் 24 வரை: பேங்காங்கின் ‘லிட்டில் இந்தியா’ என அழைக்கப்படும் பஹுரத் (Phahurat) பகுதியில் ‘த்ரெட்ஸ் ஆஃப் ஃபெய்த்’ விழா நடக்கிறது. நவம்பர் 24 பௌர்ணமி அன்று தேவ் தீபாவளி, லாய் கிராத்தோங் மற்றும் குருபூர்வ ஆகிய 3 பண்டிகைகளும் ஒன்றாக கொண்டாடப்படும்.

நவம்பர் 26 முதல் 29 வரை: ‘எம் குவார்டியர்’ பகுதியில் ‘மியூசிக் ஆன் தி அவென்யூ’ என்ற பாலிவுட் இசை நிகழ்ச்சியுடன் 4 வாரத் திருவிழா நிறைவடைகிறது.

பட்டாயா

நவம்பர் 7 முதல் 15 வரை: ‘சென்ட்ரல் ஃபெஸ்டிவல் பட்டாயா பீச்’ பகுதியில் ‘ஈவினிங்ஸ் பை தி சீ’ என்ற கடற்கரை விழா நடக்கிறது.

நவம்பர் 13 முதல் 15 வரை: ‘பட்டாயா பீச் ரோட்’ பகுதியில் கடற்கரை ஓரங்களில் விளக்கேற்றும் ‘லேம்ப்ஸ் அலாங் தி ஷோர்’ விழா நடைபெறுகிறது.

ஃபுகெட்

நவம்பர் 8 (தீபாவளி நாள்): ‘சென்ட்ரல் ஃபெஸ்டிவல் படாங்’ பகுதியில் ‘ஏ சண்டே ஆஃப் ஃபிளேவர்’ என்ற பிரம்மாண்ட இந்திய உணவுத் திருவிழாவும், தீபாவளி கொண்டாட்டங்களும் நடைபெறவுள்ளன.

2027-ஆம் ஆண்டில் இந்தியா – தாய்லாந்து இடையேயான 80 ஆண்டுக்கால ராஜாந்திர உறவை கொண்டாடும் விதமாகவும், தாய்லாந்தில் வாழும் இந்திய சமூகத்தினரின் பங்களிப்பைக் கௌரவிக்கும் விதமாகவும் இந்த விழா நடைபெறுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author