சீனாவில் விடுமுறை பொருளாதாரத்தின் பொற்காலம்

சீனத் தேசிய தின விடுமுறையில், திறந்த சீனாவின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் வசீகரத்தையும் வளர்ச்சியின் உயிராற்றலையும் உணர்ந்து கொள்ள அதிக வெளிநாட்டவர்கள் வருகை புரிந்துள்ளனர். சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் உலகளவில் மேற்கொண்ட கருத்து கணிப்பின்படி, சமூக ஊடகங்களில் வெளியான சீனச் சுற்றுலா பற்றிய அம்சங்களால் சீனா பற்றி அறிந்து கொள்ளவும் சீனாவுக்கு சுற்றுலா செய்யவும் தங்களது ஆர்வம் வலுவடைந்து வருகிறது என்று 92.8 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டின் முற்பாதியில் விசா விலக்கு வசதியுடன் சீனாவுக்கு வருகை தந்த வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 78 லட்சத்து 15 ஆயிரமாகும். சீனாவுக்கு வருகை புரிந்த மொத்த வெளிநாட்டவர்கள் எண்ணிகையில் இது 77.7 விழுக்காடு வகிக்கிறது. இது குறித்து கருத்து தெரிவிக்கையில், விசா மற்றும் சுங்க அனுமதி நடைமுறைகளை சீனா தொடர்ந்து மேம்படுத்தி வருவதால் வெளிநாட்டவர்கள் சீனாவில் சுற்றுலா மேற்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது என்று 91.8 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். சீனா திறந்த நிலையில் உலகுடன் வளர்ச்சி வாய்ப்புகளை பகிர்ந்து கொள்கிறது என்று 89.5 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

உள்வரும் சுற்றுலா பயணமானது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வெளிக்காட்டக் கூடிய முக்கிய ஜன்னலாகும். கருத்து கணிப்பின்படி, 89.8 விழுக்காட்டினர் விரைவான வளர்ச்சியை பராமரித்து வரும் சீனப் பொருளாதாரத்தை பாராட்டினர். சீனாவின் விடுமுறை நாட்களில் அதிகரித்து வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், சீனப் பொருளாதாரத்தின் உயிராற்றல் மற்றும் மீள்தன்மையை பிரதிபலிப்பதோடு, நாகரிகங்களிடையே பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றலுக்கான விருப்பத்தையும் இது வெளிப்படுத்துகிறது.

You May Also Like

More From Author