2026 உலக இணைய மாநாட்டின் வூசென் உச்சிமாநாடு 5ஆம் நாள் நிறைவடைந்தது. 13 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த உச்சிமாநாட்டின் மூலம், உலகின் இணைய வளர்ச்சி மற்றும் மேலாண்மைக்கு சீனாவின் திட்டம் புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வருவதை உலகம் கண்டு கொண்டுள்ளது.
2015ஆம் ஆண்டில் நடைபெற்ற 2ஆவது உலக இணைய மாநாட்டில் இணைய வெளியில் பொது எதிர்கால சமூகக் கட்டுமானம் எனும் முன்மொழிவைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கினார். இது இணைய வளர்ச்சி மற்றும் மேலாண்மை பிரச்சினைக்கான சீனத் திட்டமாக வினியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், இந்த முன்மொழிவு, ஒரு கருத்தாக்கம் என்பதில் இருந்து நடவடிக்கையாக மாறி, உலகின் இணைய வளர்ச்சி மற்றும் மேலாண்மைக்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது.
புத்தாக்கம் என்பது இணைய வளர்ச்சிக்கான மையமான உந்து ஆற்றலாக விளங்குகிறது. புத்தாகத்தில் சீனா எப்போதும் ஊன்றி நின்று வருவது, உலகின் இணைய வளர்ச்சி மற்றும் மேலாண்மைக்குப் புதிய வளர்ச்சி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதோடு, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றலையும் கொண்டு வருகிறது.
உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவுகளை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்தி வரும் சீனா, எண்ணியல் அடிப்படை வசதிகளின் கட்டுமானம், எண்ணியல் தொழில் நுட்பத் திறமைசாலி பயிற்சி, எண்ணியல் தொழில் நுட்ப திறன் உயர்வு ஆகிய துறைகளில், உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு ஆதரவளிக்கும் என்று நடப்பு உச்சிமாநாட்டில் தெரிவித்தது. இதன் மூலம், எண்ணியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கான இடைவெளியைக் குறைப்பதோடு, உலகளவில் நியாயமான மற்றும் நெடுநோக்கு வளர்ச்சியையும் விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
