ஏஐ வளர்ச்சி மனிதகுலத்துக்குப் பயனளிக்க வேண்டும்: சீனா

ஐ.நா பாதுகாப்பவையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு பற்றி 23ஆம் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூசோங் சர்வதேச சமூகம் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். மனிதகுலத்துக்கு நன்மையளித்து உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்குத் துணை புரியும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் துறையை வளர்க்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், உலகச் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பில் மேலதிக நாடுகள் இணைவதை சீனா வரவேற்கிறது என்றும், பன்னாடுகளுடன்  இணைந்து உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்துக்கு நியாயமான அமைப்புமுறையை உருவாக்க சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author