சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வின் அறிக்கை வெளியீடு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் மூன்றாவது முழு அமர்வு ஜூலை 15 முதல் 18ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளர் ஷிச்சின்பிங் இதில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
ஷிச்சின்பிங் வழங்கிய பணியறிக்கை இதில் கேட்டறியப்பட்டு விவாதிக்கப்பட்டு, சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கி, சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய யுகம் தொட்டு, சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் ஆழமாக்குவதன் வெற்றிகரமான நடைமுறை மற்றும் மாபெரும் சாதனையை இம்முழு அமர்வு வெகுவாக பாராட்டி, சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கி, சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது பற்றி ஆராய்ந்து, தற்போதைய மற்றும் எதிர்வரும் காலத்தில் சீன நவீனமயமாக்கத்தின் மூலம் வல்லரசு கட்டுமானத்தையும் தேசிய மறுமலர்ச்சியையும் பன்முகங்களிலும் முன்னேற்றுவதற்கான முக்கிய காலமாகும் என்று கருத்து தெரிவித்தது.
சீன தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச அமைப்பு முறையை தொடர்ந்து மேம்படுத்தி வளர்ப்பதும், நாட்டின் மேலாண்மை முறைமை மற்றும் மேலாண்மை ஆற்றலின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதும், சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவதற்கான பொது இலக்காகும். 2035ஆம் ஆண்டு வரை, உயர் நிலையுடைய சோஷலிச சந்தை பொருளாதார அமைப்பு முறையை பன்முகங்களிலும் உருவாக்கி, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச அமைப்பு முறையை மேலும் மேம்படுத்தி, நாட்டின் மேலாண்மை முறைமை மற்றும் மேலாண்மை ஆற்றலின் நவீனமயமாக்கத்தை அடிப்படையில் நனவாக்கி, சோஷலிச நவீனமயமாக்கத்தை அடிப்படையில் நனவாக்கி, இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் சோஷலிச நவீனமயமாக்க வல்லரசை பன்முகங்களிலும் உருவாக்குவதற்கு உறுதியான அடிப்படையிட வேண்டும் என இம்முழு அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.