இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலை ஏன் ஏற்படுவதில்லை என்பதே அடிப்படையான கேள்வியாக உள்ளது. எங்கெல்லாம் ஜனநாயகம் இல்லையோ அங்கு ஆட்சிக்கு எதிரான மனநிலை ஏற்படாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , “2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முறைகேடாக நடந்துள்ளது. எனவே இப்படி முறைகேடாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களும் சட்டவிரோதமானது. எனவே அவற்றை செல்லாது என அறிவிக்க வேண்டும். சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் சிங் அனைத்து சட்டவிரோதமான செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கிறார். அவரது செயல்பாடுகள் அனைத்தையும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். இந்தியாவில் நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களுமே முறைகேடாகவே நடத்தப்படுகிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர்தான் தற்பொழுது நடைபெற்றுள்ள இந்த இவ்வளவு பெரிய முறைகேடுகளுக்கு மூல காரணம். அவர்கள் இருவரும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இந்திய ஜனநாயகத்தை அளித்த இவர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேச துரோகிகள் தேச விரோதிகள். இந்தியாவில் தேர்தல் முடிவுகள் திருடப்படுகிறது. சதாம் உசேன் ஆட்சி காலத்தில் அரசுக்கு எதிரான மனநிலை என்பது வெளிப்படவில்லை. வடகொரியாவில் அரசுக்கு எதிரான மனநிலை என்ற பேச்சே கிடையாது. எங்கெங்கெல்லாம் ஜனநாயகம் இல்லையோ அங்கெல்லாம் அரசுக்கு எதிரான மக்களின் மனநிலை என்பது வெளிப்படாது. இது வெறும் வாக்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல் மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல். வாக்காளர்களால் நிர்ணயிக்கப்பட வேண்டிய தேர்தல் முடிவுகள் என்பது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்சாவின் விருப்பத்திற்கு ஏற்ப வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயகத்தை அழிப்பவர்கள் அதானி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் ஆகியோர்டான். இவர்களுடைய சிப்பாய்கள் பிரபல ஊடகங்களை சேர்ந்த எடிட்டர்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற உறுப்பினர் கங்கன ராணாவத் தர்மேந்தர் பிரதான்” என்றார்.
