தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!

Estimated read time 1 min read

வங்கிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற முக்கியக் கோரிக்கையை முன்வைத்து, பொதுத்துறை வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெற்ற நிலையில், தற்போது மேலும் தீவிர கட்டத்தை எட்டியுள்ளது.

வங்கித் தொழிற்சங்கங்களின் அறிவிப்பின்படி, வரும் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. அதோடு நில்லாமல், கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் வரும் அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தத் தொடர் போராட்டங்கள் வங்கித் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, செப்டம்பர் 28 முதல் 30 வரை அறிவிக்கப்பட்டுள்ள மூன்று நாள் வேலைநிறுத்தம், வங்கிகளின் அரையாண்டு கணக்கு முடிப்பு நாளான செப்டம்பர் 30-ம் தேதியுடன் சரியாக இணைந்து வருகிறது.

ஒரு ஆண்டின் அரையாண்டு காலத்தில் கணக்குகளைச் சரிபார்ப்பது, ஒதுக்கீடுகளை நிர்ணயிப்பது, கருவூலம் மற்றும் சந்தை சார்ந்த பணிகளைக் கையாள்வது போன்றவற்றுக்கு இந்த நாள் மிகவும் முக்கியமானது. இதனுடன் வழக்கமான வார இறுதி விடுமுறை நாட்களும் சேர்ந்து கொள்வதால், நிதி ஆண்டின் மிக முக்கியமான காலகட்டத்தில் வங்கிகள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு முழுமையாக முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த முடக்கம் வாடிக்கையாளர்கள், வணிக நிறுவனங்கள், அரசுப் பரிவர்த்தனைகள் மற்றும் பன்னாட்டு வங்கிச் செயல்பாடுகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலைநாளில் தான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதியம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். ஆனால், செப்டம்பர் மாத இறுதியில் வங்கிகள் தொடர்ச்சியாக இயங்காத சூழல் ஏற்பட்டால், தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கும் அவசரச் செலவுகளுக்கும் பணம் எடுக்க முடியாமல் லட்சக்கணக்கான ஊழியர்கள் சிரமத்தைச் சந்திக்க நேரிடும் என்ற சூழல் உருவானது.

இந்த இக்கட்டான சூழ்நிலையைத் துரிதமாகப் புரிந்து கொண்ட தமிழக நிதியமைச்சகம், உடனடியாகக் களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு, செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியத் தொகையை உடனடியாக, அதாவது நாளையே (வெள்ளிக்கிழமை) ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அவசர உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அரசின் இந்தத் துரிதமான மற்றும் தொலைநோக்கு நடவடிக்கையானது, லட்சக்கணக்கான அரசுப் பணியாளர்களையும் ஓய்வூதியதாரர்களையும் பெரும் மன உளைச்சலில் இருந்து காப்பாற்றியுள்ளதுடன், அவர்களை நிம்மதிப் பெருமூச்சுவிடச் செய்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author