ஐந்தாண்டு திட்டத்தை வைத்து இதனை நடைமுறைப்படுத்துவதில் சீனா ஊன்றி நிற்பது ஞானம் மிக்க செயலாகும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வகத்தின் மூத்த அறிஞர் கிஷோர் மஹ்பூபானி தெரிவித்தார். ஐந்தாண்டு திட்ட முறை பயனுள்ளதாக இருக்குமென சீனா உலகிற்கு நிரூபித்துள்ளது என்பதில் ஐயமில்லை. இந்த முறை மூலம், உலக தயாரிப்புத் துறையில் சீனாவின் பங்கு விகிதம் 2000ஆம் ஆண்டில் இருந்த 5விழுக்காட்டிலிருந்து 2030ஆம் ஆண்டு அளவில் 45விழுக்காடாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
