சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 24ஆம் நாள் காலையில் வெள்ளை மாளிக்கையில் சந்தித்துப் பேசினர்.
சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் அரையாண்டுக்காலத்திற்குள் பரஸ்பர பயணம் மேற்கொண்டுள்ளனர். இது சீன-அமெரிக்க உறவு வரலாற்றில் முன்பு கண்டிராதது என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.
இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுக்கள் புதிய சுற்று கலந்தாலோசனையை நடத்தி, ஒரு புதிய கூட்டு ஏற்பாடுகளை எட்டியுள்ளன. இந்த விளைவு, இரு நாடுகளின் தொழில்துறைகளுக்கும் மக்களுக்கும், உலகப் பொருளாதாரத்திற்கும் கூட நல்ல செய்தி ஆகும். இரு தரப்புகளும் ஒரேத் திசையில் சென்று, சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவு தொடர்ச்சியாகவும் சீராவும் வளர்ந்து வருவதை ஊக்குவிக்கும் என்றும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
சீனாவும் அமெரிக்காவும் பெரிய நாடுகளாக திகழ்கின்றன. இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுக்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, மேலும் சிறந்த உடன்படிக்கையை உருவாக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நிலைமைகள், உக்ரைன் நெருக்கடி, கொரிய தீபகற்பம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
2026ஆம் ஆண்டு ஏபெக் உச்சிமாநாடு மற்றும் ஜி20 உச்சிமாநாடு நடைபெறுவதற்காக ஒன்றுக்கொன்று ஆதரவு அளிப்பதகாவும், அவர்கள் உறுதிப்படுத்தினர்.
