சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சீனாவின் தியன்ச்சின் மாநகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டத்தில் உலகளாவிய நிர்வாக முறை பற்றிய புதிய முன்மொழிவை வழங்கினார்.
உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற மற்றும் ஐ.நா நிறுவப்பட்ட 80ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். வரலாற்றை நினைவில் கொண்டு, எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முக்கிய தருணமாகும். ஷிச்சின்பிங் முன்வைத்த உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவு, தற்போதைய உலக ஆட்சி முறை அமைப்பு முறையின் முக்கிய முரண்பாடுகளை அறிந்து, இறையாண்மை சமம், சர்வதேச சட்ட ஒழுங்கை பின்பற்றுவது, பல தரப்புவாதத்தை நடைமுறைப்படுத்துவது, மனிதர்கள் முதன்மை நடைமுறை பயன்களில் முக்கியத்துவம் அளிப்பது ஆகிய 5 பெரிய கொள்கைகள் இதில் அடக்கம்.
உலகளாவிய நிர்வாக முறை முன்மொழிவை முன்வைத்ததோடு, இந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்தும் முக்கிய நாடாகவும் சீனா விளங்குகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பிளஸ் ஒத்துழைப்பை முன்மாதிரியாக கொள்ளும் போது, ஷிச்சின்பிங் இந்த முன்மொழிவை முன்வைத்த போது, எரியாற்றல், பசுமையான தொழிற்துறை, எண்ணியல் பொருளாதாரம் ஆகியவை குறித்து சீன-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 3 முக்கிய ஒத்துழைப்பு மேடைகளை உருவாக்க வேண்டும் என்றார். மேலும், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம், உயர் நிலை கல்வி, தொழில் நுட்பப் பயிற்சிக் கல்வி உள்ளிட்ட 3 ஒத்துழைப்பு மையங்கள் உருவாக்கப்படும். சீனா, பல்வேறு நாடுகளுடன் இணைந்து, மேலும் நியாயமான, சமமான உலகளாவிய நிர்வாக முறை அமைப்புமுறையை கட்டியமைத்து, மனித குலத்தின் பொது சமூகத்தை உருவாக்கி, உலக அமைதியான வளர்ச்சி கொண்ட அருமையான எதிர்காலத்தைக் கூட்டாகப் படைத்து வருகிறது.