சீன தேசிய புள்ளிவிவர பணியகம் 10ஆம் நாள் வெளியிட்ட தகவலின் படி, ஆகஸ்ட் திங்களில், சீனாவின் நுகர்வு சந்தை நிலையாக இயங்கியது.
நுகர்வு விலை குறியீடு ஜுலை திங்களில் இருந்ததை விட சமமாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட குறைந்துள்ளது.
அதேவேளை, நுகர்வை ஊக்குவிக்கும் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், உணவு மற்றும் எரி பொருட்களின் விலையை நீக்கி, மைய நுகர்வு விலை குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.9 விழுக்காடு அதிகரித்தது. அதிகரிப்பு விகிதம், ஜுலை திங்களில் இருந்ததை விட 0.1 புள்ளி அதிகம். கடந்த 4 திங்களில் அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.
ஆகஸ்ட் திங்களில் உற்பத்தியாளர் விலை குறியீடு கடந்த மாதத்தை விட சமமாக இருந்தது. கடந்த 8 திங்களில் இந்த குறியீடு தொடர்ந்து குறைந்த நிலை நிறுத்தப்பட்டுள்ளது.