மத்திய கிழக்கு பிரச்சினைக்கான சீன பிரதிநிதியின் கத்தார் பயணம்

மத்திய கிழக்கு பிரச்சினைக்கான சீன சிறப்பு பிரதிநிதி ச்சே ச்சுன், 15 மற்றும் 16ஆம் நாள், கத்தாரில் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் ஹுவாலைஃபியைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

இரு நாட்டு தலைவர்களின் தலைமையில் சீன-கத்தார் உறவு சீராக வளர்ந்து வருகின்றது. முதல் கட்ட புரிந்துணர்வு குறிப்பாணையை ஈரானும் அமெரிக்காவும் எட்டியது குறித்து சீனா வரவேற்பு தெரிவித்தது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் அமைதியை நனவாக்குவதற்கும் முயற்சி மேற்கொண்ட கத்தார் உள்ளிட்ட நாடுகளை சீனா பாராட்டுகிறது.

மத்திய கிழக்கு பிரதேசத்தின் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காப்பது குறித்து சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்மொழிந்த 4 முன்மொழிவுகளில் சீனா ஊன்றி நின்று, வளைகுடா பிரதேசத்தின் அமைதியை நனவாக்க சீனா பாடுபடும் என்றார்.

You May Also Like

More From Author