கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுமானம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனை

Estimated read time 0 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், 140 கோடி மக்கள் இன்னல்களைச் சமாளித்து பயணித்து வருகின்றனர். இப்பயணத்தின் மாலுமியாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் செயல்பட்டு வருகின்றார். சில பத்து ஆண்டுகளில் ஆய்வு மற்றும் நாட்டின் ஆட்சி முறை அடிப்படையில், ஆளும் கட்சியை நன்றாக நிர்வகிக்கும் ஒரு தொகுதி தெளிவான கருத்துக்களை அவர் முன்வைத்தார். அவை, கட்சியின் கட்டுமானம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையாகும்.

கண்டிப்பான முறையில் கட்சி அதிகாரிகளின் செயல்களை ஒழுங்கு செய்வது, எப்போதும் பொது மக்களுடன் நெருங்கிப் பழகுவது, சுய புரட்சியை முன்னெடுப்பது ஆகியவை, இச்சிந்தனையின் சுருக்கமான விளக்கம் ஆகும்.

அவரின் இச்சிந்தனைகள், கட்சி நிர்வாகத்துக்கான தலைமை வழிகாட்டியாகத் திகழ்வதோடு மட்டுமல்லாமல், நாட்டின் நீண்டகால அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அடிப்படை உத்தரவாதமாகவும் திகழ்கின்றன. உலகின் பன்னாட்டு அரசியல் கட்சிகளின் ஆட்சி முறை சிக்கலுக்குப் புதிய தீர்வு முறையையும் இது வழங்குகிறது.

You May Also Like

More From Author