2026 உலக இணைய மாநாட்டு வூசென் உச்சிமாநாட்டிற்கான அடிப்படைத் தகவல்கள், சிறப்பம்சங்கள் மற்றும் ஆயத்தப்பணிகளை அறிமுகப்படுத்தும் வகையில், உலக இணைய மாநாட்டு சர்வதேச அமைப்பு செப்டம்பர் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. “திறந்த மூல மென்பொருள், வெளிப்படைத்தன்மை, கூட்டு வளர்ச்சி மற்றும் பகிரப்பட்ட நன்மைகள், இணையவெளியில் பொது எதிர்காலத்துடன் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குதல்” என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த உச்சிமாநாடு, சீனாவின் செஜியாங் மாநிலத்தின் வூசென் வட்டத்தில் நவம்பர் 2முதல் 5ஆம் நாள் வரை நடைபெறும்.
இந்த உச்சிமாநாட்டில், தொடக்க விழா மற்றும் முதன்மை கருத்தரங்கு தவிர, இணையவெளி ஒத்துழைப்பிற்கான உலகளாவிய ஆட்சிமுறை முன்மொழிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் உட்பொதிந்த இன்டலிஜென்ஸ், இடம் மற்றும் கால நுண்ணறிவு, பசுமை மற்றும் கார்பன் குறைந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட கருப்பொருட்களைக் கொண்ட 27 கிளை கருத்தரங்குகளும் நடைபெறும். தவிர, இந்த உச்சிமாநாட்டில் உலக இணைய மாநாட்டு மன்றக் கூட்டமும் நடைபெறும்.
