சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 24ஆம் நாள் பெய்ஜிங்கில் தென் கொரிய அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் பார்க் பியோங்-சியூ(Park Byeong-seug) சந்தித்து உரையாடினார்.
வாங்யீ கூறுகையில், புதிய தென் கொரிய அரசு பதவியேற்ற பிறகு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், தென் கொரிய அரசுத் தலைவர் லீ ஜே-மியுங் ஆகிய இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அப்போது, இரு நாட்டு உத்திநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை மேலும் உயர் நிலைக்கு கொண்டு வருவது குறித்து இரு தலைவர்கள் முக்கிய ஒத்த கருத்துகள் எட்டப்பட்டு, அடுத்த கட்ட இரு தரப்பு உறவின் வளர்ச்சிக்கான திசையை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இரு தரப்பும் இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட தொடக்கத்தில் இருந்த அசல் விருப்பத்துக்குப்படி, நட்புறவை உறுதிப்படுத்தி, கூட்டு நலன்களை விரிவாக்கி, இரு நாட்டு மக்களிடையேயான உணர்வுகளை மேம்படுத்தி, உரிய முறையில் கூருணர்வுடைய பிரச்சினைகளைக் கையாள வேண்டும் என்றும் வாங்யீ விருப்பம் தெரிவித்தார்.
பார்க் பியோங்-சியூ கூறுகையில், தென் கொரிய புதிய அரசு இரு நாட்டு உத்திநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவை இயல்பான பாதைக்குத் திருப்ப விரும்புவதாகவும், ஒரே சீனா என்ற கோட்பாட்டை தென் கொரிய அரசு எப்போதும் மரியாதையுடன் பின்பற்றுவதோடு, சீனா உள்ளிட்ட பெரிய நாடுகளுடனான உறவுகளை இணக்கமாக வளர்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.