2025ஆம் ஆண்டுக்கான வசந்த விழாக் கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சியின் விளம்பர காணொளியை சீன ஊடகக் குழுமம் சமீபத்தில் வெளியிட்டது.
இந்த சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி, 2025ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாளிரவில் ஒளிபரப்பாகும்.
வசந்த விழா அல்லது சீன புத்தாண்டு விழா என்பது, சீனாவின் மிக முக்கிய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகும். விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குடும்பத்தினர்கள் ஒன்றுகூடி, வசந்த விழா சிறப்பு நிகழ்ச்சியை கண்டு ரசிப்பது ஒரு வழக்கமாக மாறியுள்ளது.
1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிறப்பு நிகழ்ச்சியில், பாடல்கள், நடனங்கள், நகைச்சுவை, ஓபராக்கள் மற்றும் நாட்டுப்புற கலை ஆகியவை அடக்கம். உலகின் மிக அதிகமாக பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின்(யுனெஸ்கோ) அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில், சீனாவின் வசந்த விழா இணைக்கப்பட்டுள்ளது என்று டிசம்பர் 4ஆம் நாள் யுனெஸ்கோ கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.