சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 5ஆம் நாள் பிற்பகல் துஷான்பே நகரில் தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் எமோமாரி ரஹ்மானுடன் பெரிய அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில் 5 ஆண்டுகளுக்கு பின் தங்கள் நாட்டில் மீண்டும் பயணம் மேற்கொண்டு, மேலும் செழிப்பாக வளர்ந்து வரும் தஜிகிஸ்தானைக் கண்டுள்ளேன். நட்பார்ந்த அண்டை நாடாகவும், பன்முக நெடுநோக்கு கூட்டாளியாகவும், மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தங்கள் தலைமையில், தஜிகிஸ்தானின் பல்வகை வளர்ச்சி இலக்குகள் நனவாக்கப்பட முடியும் என நம்புவதாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், புதிய நிலைமையில், தஜிகிஸ்தானுடன் புதிய யுகத்தில் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவை வளர்க்கவும், மேலும் உயர்ந்த துவக்கப் புள்ளியில் சீன-தஜிகிஸ்தான் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கவும் சீனா விரும்புகிறது. இரு நாடுகளிடையே ஒன்றுக்கொன்று நலன் தரும் ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து முன்னேற்றும். சொந்த நாட்டின் நிலைமைக்கு ஏற்ற வளர்ச்சி பாதையில் தஜிகிஸ்தான் முன்னேறுவதையும், நாட்டின் சுதந்திரம், அரசுரிமை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணிகாப்பதற்கு தஜிகிஸ்தான் மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் சீனா உறுதியுடன் ஆதரிக்கும். சர்வதேச சூழ்நிலை எவ்வாறு மாறினாலும், தஜிகிஸ்தானின் நம்பகமான நண்பராக சீனா எப்போதும் இருக்கும் என்று தெரிவித்தார்.