திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்.1, 5-ல் VIP தரிசனம் ரத்து..!

Estimated read time 1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் மற்றும் விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அக்.1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் VIP தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அந்த நாட்களில் பரிந்துரை கடிதங்கள் எவையும் ஏற்கப்பட மாட்டாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இலவச தரிசன வழியில் (சர்வதரிசனம்) வருகை தரும் சாமானிய பக்தர்களுக்கு விரைவாக சுவாமி தரிசனம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்த்து, விரைந்து தரிசனம் செய்ய தேவையான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.

எனவே, அக்டோபர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வி.ஐ.பி. தரிசனத்திற்குத் திட்டமிட்டிருந்த பக்தர்கள் தங்களது பயணத்திட்டத்தை இதற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

You May Also Like

More From Author