சீனத் தேசிய அஞ்சல் பணியகம் செப்டம்பர் 30ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, செப்டம்பர் 29ஆம் நாள் வரை, இவ்வாண்டில் சீனத் தேசியளவில் விரைவு அஞ்சல் வழியாக அனுப்பும் பொதிகளின் எண்ணிக்கை 15 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 12 நாட்களுக்கு முன்னதாகவே இந்த எண்ணிக்கை எட்டப்பட்டது.
சீனாவின் தூதஞ்சல் சேவை வேகமாக வளர்ந்து வருவதன் மூலம், சீனப் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மற்றும் வலுவான மீள் தன்மை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது
