செப்டம்பர் 3ம் நாள் நடைபெறவுள்ள ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெற்ற 80வது ஆண்டு நிறைவின் நினைவு கூட்டம் மற்றும் ராணுவ அணிவகுப்பு குறித்து, ஐரோப்பிய மற்றும் ஆசியாவின் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஜப்பான் அரசு தூதாண்மை வழிமுறையின் மூலம் வேண்டுகோள் விடுத்தது.
இது தொடர்பான தகவலை கவனித்துள்ள சீனா, ஜப்பானுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலைமையை ஜப்பான் தெளிவுப்படுத்துமாறு சீனா கோரியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியா குன் 26ம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், வரலாற்று பிரச்சினையைக் கடக்க விரும்பினால், ஆக்கிரமிப்பு வரலாற்றை ஜப்பான், நியாய மனப்பான்மையுடன் மறு ஆய்வு செய்து, ராணுவ வெறியிலிருந்து முற்றிலும் விடுபட்டு, அமைதி வளர்ச்சி பாதையில் நடை போட வேண்டும். சீனா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட நாடுகளின் மக்களின் உணர்வுக்கு உண்மையாக மதிப்பளிப்பது தான், ஆசியாவின் அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறும் என்று தெரிவித்தார்.
