2026 உலக சீன மொழி மாநாட்டின் துவக்க விழாவில் சீனத் துணை அரசுத் தலைவர் ஹான்சேங் 13ஆம் நாள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், உலகளவில் சீன மொழிக் கல்வியில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மிகவும் கவனம் செலுத்துவதாகவும், வெளிநாடுகளில் சீன மொழி கற்றவர்கள் சீன வெளிநாட்டு நட்புறவுக்கான தூதராகச் செயல்பட்டு பரஸ்பர நம்பிக்கையையும் மக்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் அதிகரிப்பதற்குப் பங்காற்ற வேண்டும் என்று ஊக்கம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
உலக சீன மொழி மாநாடானது உலகளவில் மொழிகளுக்கிடையிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான முக்கிய மேடையாகும் என்று சுட்டிக்காட்டிய அவர், இம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் சீன மொழிக் கல்வியின் உயரத் தர வளர்ச்சிக்கு முன்மொழிவுகளை வழங்கி மனதகுலத்தின் அருமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்கப் பாடுபட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
2026 உலக சீன மொழி மாநாட்டின் துவக்க விழாவில் பல்வேறு நாடுகளின் அரசு அதிகாரிகள், நிபுணர்கள், அறிஞர்கள், பல்கலைக்கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் என சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்.
