இளைஞர்களுக்கான 4ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு

Estimated read time 0 min read

இளைஞர்களுக்கான 4ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 13ஆம் நாளிரவு செனகல் தலைநகரான டாகாரில் நிறைவடைந்தது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஒலிம்பிக் தொடர் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த இரு வாரங்களில் சுமார் 2650 இளம் விளையாட்டு வீரர்களும் விராங்கனைகளும் டாகார், ஜம்னியாஜா, சாலி ஆகிய 3 நகரங்களில் 25 பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் 150க்கும் அதிகமான போட்டிகளில் பங்கெடுத்தனர்.

சீனப் பிரதிநிதிக் குழு 18 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெங்கலப் பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 5 வெங்கலப் பதக்கங்களுடன் பட்டியலில் 21ஆம் இடம் பிடித்துள்ளது. குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியா இந்த இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி அடுத்து எங்கு இடத்தில் நடைபெறும் என்பது பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author