‘ஐரோப்பா 301’ எனப்படும் கருவியை விரைவாக உருவாக்குமாறு ஐரோப்பிய ஆணையத்திற்கு “ஐரோப்பிய ஒன்றியத்தின் சில உறுப்பு நாடுகள், கூட்டு ஆவணம் ஒன்றை இயற்ற வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, இது பாதுகாப்புவாதம் மற்றும் ஒருதலைப்பட்ச செயலுக்கான எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார். மேலும் சீனா-ஐரோப்பிய வர்த்தகத்தை மட்டுமல்ல, உலக தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளின் நிலைத்தன்மையையும் இது பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார்.
தற்போது சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக மற்றும் முதலீட்டு ஆலோசனை இயங்குமுறை மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஒருபுறம் பேச்சுவார்த்தை, மறுபுறம் அழுத்தம் என்ற நிலை இருந்தால், இரு தரப்பு நம்பிக்கையை அது கெடுக்கும். எனவே, ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளை தீர்க்கும் சரியான பாதையில் இருக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும், சீன நிறுவனங்கள் அல்லது பொருட்களுக்கு எதிராக பாகுபாடான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து எடுத்தால், சீனத் தொழில்துறையின் சட்டபூர்வ உரிமைகளை பாதுகாக்க சீனா உறுதியாக பதில் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
