இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் சீனா முழுவதும் 413 கோடி ரயில் பயணங்கள்

Estimated read time 1 min read

சீனா முழுவதும் இவ்வாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரை ரயில் போக்குவரத்துகளின் எண்ணிக்கை 413 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 4.7 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றில் மிக அதிகமாகும். சீனாவின் ரயில் போக்குவரத்து நிலை பாதுகாப்பாகவும் நியாயமாகவும் ஒழுங்காகவும் இருக்கிறது.

இவ்வாண்டு, புதிதாகத் திறந்து வைக்கப்படும் இருப்புப் பாதைகள், நிலையங்கள், இயந்திரங்கள் முதலியவற்றை இருப்புப்பாதை வாரியங்கள் செவ்வனே பயன்படுத்தி, பயணிகளின் தேவைக்கேற்ப ரயில் சேவைத் திட்டத்தை சரிப்படுத்துவதால் மக்களின் ரயில் பயணங்கள் நிதானமாக அதிகரித்துள்ளன. ஜனவரி முதல் அக்டோபர் வரை நாடு முழுவதும் ரயில் மூலம் தினமும் சராசரியாக இயங்கிய தொடர்வண்டிகளின் எண்ணிக்கை 11670 ஆகும். இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவற்றில் அக்டோபர் முதல் நாள் பயணித்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 52 இலட்சம் 4 ஆயிரமாகும். இயங்கப்பட்ட தொடர்வண்டிகளின் எண்ணிக்கை 14885 ஆகும். இரண்டும் நாள் ஒன்றின் சராசரி நிலையை விட மிக அதிகமாகும்.

படம்:VCG

Please follow and like us:

You May Also Like

More From Author