எபெக் வணிக ஆலோசனை மன்றத்தின் 4ஆவது கூட்டம் சனிக்கிழமை சென்ச்சேன் நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் கழுவின் உறுப்பினரும் துணைத் தலைமை அமைச்சருமான ஹே லிஃபெங் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தின் போது எபெக் வணிக ஆலோசனை மன்றத்தைச் சேர்ந்த சில பிரதிநிதிகளைச்சந்தித்து, ஆசிய பசிபிக் பிராந்திய பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை ஆழமாக்குவது பற்றி அவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறி கொண்டார்.
