இந்திய விமானி உடல்நிலை எப்படி இருக்கிறது; இந்திய தூதரகம் வெளியிட்ட தகவல்..!!

Estimated read time 1 min read

துபாயில் இருந்து 180 பயணிகளுடன் இஸ்ரேல் சென்ற விமானத்தை கடத்த முயற்சித்த துணை பைலட்டின் முயற்சியை முறியடித்தார் இந்திய பைலட் ஸ்மித் மச்சார். ‘கத்திக்குத்து காயத்துடன் போராடிய அவரது செயல்தான் அனைவரையும் காப்பாற்றியது’ என்கின்றனர்,

பயணிகள். கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் போராடி விமானத்தை மீட்ட விமானி சவுதி அரேபியாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தபூக்கிற்குத் திருப்பிவிடப்பட்ட ப்ளைதுபாய் விமானத்தின் கடத்தல் முயற்சியை துணிச்சலுடன் செயல்பட்டு தடுத்த இந்திய விமானி சுமித் மச்சாரின் உடல்நிலையை ரியாத்தில் உள்ள எங்கள் தூதரகமும், ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகமும் கண்காணித்து வருகின்றன. அவர் சவூதி அரேபியாவின் வடமேற்கில் உள்ள தபூக் நகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகிறார்.அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது காயங்களிலிருந்து விரைவில் குணமடைவார் என்று நம்புகிறோம். நாங்கள் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். சவுதி அதிகாரிகளுடன் இணைந்து அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிப்போம்; அவரது நல்வாழ்விற்காக சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்றும் குடும்பத்தினருக்கு உறுதியளிக்கிறோம். இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author