“இந்தியாவே பெருமை கொள்கிறது!” – FlyDubai கடத்தல் முயற்சியை முறியடித்த வீர விமானி சுமித் மச்சாருக்கு பிரதமர் மோடி புகழாரம்!

Estimated read time 1 min read

பிளை துபாய் விமான நிறுவனத்தில் இந்திய விமானி சுமித் மச்சார் பணிபுரிந்து வருகிறார். துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற விமானத்தில், சக விமானி இவரைக் கத்தியால் குத்தி விமானத்தை கடத்த முயன்றார்.

அத்தகைய ஆபத்தான நிலையிலும், படுகாயங்களுடன் போராடி 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக உலகளவில் இவர் தற்பொழுது பாராட்டப்பட்டு வருகிறார்.

மும்பையைச் சேர்ந்தவரும், குர்கானில் விமானி பயிற்சினை நிறைவு செய்தவருமான கேப்டன் சுமித் மச்சார் துணிச்சலுடன் செயல்பட்டு இந்திய விமானி சுமித் மச்சார் விமானத்தின் கட்டுப்பாட்டைத் தன்வசப்படுத்தினார்.

விமானத்தை அவர் நிலைப்படுத்திய அதே வேளையில், விமானக் குழுவினர் காக்பிட் கதவைத் திறந்து, தாக்குதல் நடத்திய துணை விமானியை அடக்கினர். 2023ம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றிய மச்சாரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ”சுமித் மச்சார் நியூசிலாந்தில் வணிக ரீதியான விமானி உரிமத்திற்கான பயிற்சியை மேற்கொண்டார்.

அவரைப் பற்றி ஒரு எதிர்மறையான விஷயத்தைக் கூட என்னால் சொல்ல முடியாது,’ என்று அவருக்குப் பயிற்சியளித்த மூத்த விமானி கூறினார். சுமித் மச்சாரின் சகோதரரும் ஒரு விமானி ஆவார்; அவர் பிளைதுபாய் நிறுவனத்தில் தான் பணியாற்றுகிறார்.சுமித் மச்சார் ஒரு ஹீரோ!

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கேப்டன் சுமித் மச்சார் ஒரு ஹீரோ; மிகக் கடுமையான ஆபத்தான சூழலிலும், பலத்த காயமடைந்த நிலையிலும், மற்றவர்களின் உயிரைக் காக்க அவர் துணிச்சலையும், மன உறுதியையும் வெளிப்படுத்தினார்.அவரது வீரமிக்க செயல் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றவும், ஒரு பெரும் துயரத்தைத் தவிர்க்கவும் உதவியது. கேப்டன் சுமித் மச்சார் குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. அவர் விரைவில் குணமடையவும், நல்ல உடல்நலத்துடனும் செயல்பட பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

You May Also Like

More From Author