சீன கிராமத்தில் இந்திய மாணவர்கள் எடுத்த வீடியோ….. ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்….!! 

Estimated read time 1 min read

சீனாவில் பிஎச்டி படித்து வரும் செய்யத் ஷென் ஆலம் என்ற இந்திய மாணவர், அங்குள்ள கிராமம் மற்றும் அரசுப் பள்ளியின் நிலையை வீடியோவாகப் பகிர்ந்துள்ள சம்பவம் சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சீன நண்பரின் வீட்டிற்குச் சென்ற அந்த மாணவர், அங்குள்ள கிராமத்து வீட்டின் சிறப்பம்சங்களை வீடியோவில் காட்டியுள்ளார். விருந்தினர்களுக்கு மிகவும் சிறப்பான உணவு தயாரித்து உபசரிக்கப்பட்ட நிலையில், வீட்டின் உள்ளே சோபா, கட்டில், பீரோ என அனைத்து வசதிகளும் மிகவும் அழகாகச் சீரமைக்கப்பட்டு இருந்தன.

இருப்பினும் அவ்வளவு பெரிய வீட்டில் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே பழைய மாடலில் இருந்தது. மேலும், வீட்டின் ஒரு அறையில் அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அவரது மனைவியின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு அறையில் சிறிய கோயில் அமைத்து முதியவர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த வீடியோவின் மிக முக்கிய அம்சமே அங்குள்ள அரசுப் பள்ளிதான். சர்வதேசத் தரம் வாய்ந்த தனியார் பள்ளி போலக் காட்சியளிக்கும் இந்த அரசுப் பள்ளியில், மாணவர்களிடம் படிப்பிற்காக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

View this post on Instagram

A post shared by Syed Shane Alam (@syedshanalig)

“>

வகுப்பறைகளில் ஏசி, வாட்டர் டிஸ்பென்சர், அதிவேக வைஃபை மற்றும் ஸ்மார்ட் போர்டுகள் எனப் பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு மற்றும் வெளிநாட்டு ஆசிரியர்களின் கற்பித்தல் சேவைகளும் வழங்கப்பட்டு வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

You May Also Like

More From Author