பல வாரங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் தங்க விலை, ஒப்பீட்டளவில் நிலையான உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் புதிய புவிசார் அரசியல் பதட்டங்கள் இல்லாததால் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை (மே 26) குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை, உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச காரணிகளால் மே மாதத்தில் சிறிது சரிவைக் கண்டது.
புவிசார் அரசியல் பதட்டங்களில் சமீபத்திய அமைதி மற்றும் அமெரிக்காவிலிருந்து முக்கிய பொருளாதார அறிவிப்புகள் இல்லாதது தங்கத்தின் விலைகளைக் குறைக்க பங்களித்தன.
இன்றைய (மே 26) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
