பாமக மோதல் தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவரை நான் ரொம்ப மதிக்கிறேன், நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் பேட்டி அளித்தார்.
பாமக தலைவர் அன்புமணியை, தலைவர் பதவியில் இருந்து நீக்கி நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தந்தை- மகனிடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
இருவரும் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இவர்களை சமாதானப்படுத்த, பாமக மூத்த தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தனது இளைய மகள் கவிதா வீட்டில் தங்கி மருத்துவ பரிசோதனைகளை முடித்து விட்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் தைலாபுரம் திரும்பினார். ராமதாஸ் உடன் அவரது மனைவி சரஸ்வதி அம்மாள் செல்கிறார். சென்னையில் தங்கும் போது ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதான பேச்சு வார்த்தையும் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து காலை 10.15 மணிக்கு தனது மனைவி சரஸ்வதி அம்மாளுடன் தைலாபுரத்தில் இருந்து சென்னை புறப்பட்டு சென்ற ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் சென்னைக்கு என்னுடைய சொந்தங்களை பார்ப்பதற்காக செல்கிறேன்.
குழந்தைகள், பேரன், கொள்ளு பேரன் இருக்கிறார்கள். திங்கட்கிழமை மீண்டும் தைலாபுரம் வருகிறேன். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்திக்கிறேன். நான் மருத்துவ பரிசோதனைக்கு போகவில்லை. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.
ஆடிட்டர் குருமூர்த்தி என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். எங்கள் நட்பு, நீண்ட நாள் நட்பு. அதே போல் சைதை துரைசாமியையும் நான் மதிக்கிறேன். அவர் எனக்கு 30 வருடமாக பழக்கம். அவங்க ரெண்டு பேரும் என்னை சந்தித்து பேச வந்தாங்க. நீங்க பார்த்திருப்பீங்க. என் வீட்டுக்கு வந்த அன்புமணி என்னை பார்த்தாரு. என்னிடம் பேசினார், இதைப்பற்றி அப்புறம் பேசலாம்” என்றார்.
