ஷென்செனில் கனடா தலைமை அமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு

Estimated read time 1 min read

ஷென்செனில் நடைபெறும் ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவுக்கு வருகை புரிந்த கனடா தலைமை அமைச்சர் கார்னியுடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 17ஆம் நாள் முற்பகல் சந்தித்து பேசினார்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனாவும் கனடாவும் ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் முக்கிய நாடுகளாகும். இருநாட்டுறவு மேம்பட்டு வளர்வது என்பது, இருநாட்டு மக்களின் நலனுக்குப் பொருந்தியதோடு, உலகின் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழுமையைப் பேணிக்காப்பதற்கும் துணைபுரியும் என்று குறிப்பிட்டார்.
சீனா-கனடா உறவின் வளர்ச்சி குறித்து ஷி ச்சின்பிங் 4 அம்ச முன்மொழிவை வழங்கினார். முதலாவதாக, தற்போதைய நிலைமைக்கிணங்க பரஸ்பர அரசியல் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். இரண்டாவதாக, திட்டங்களின் இணைப்பை வலுப்படுத்தி வர்த்தகம், எரியாற்றல், வேளாண்மை போன்ற பாரம்பரிய ஒத்துழைப்புகளை ஆழமாக்க வேண்டும். மூன்றாவதாக நெடுநோக்கு பார்வையுடன் கலாசார பரிமாற்றத்தை ஆழப்படுத்த வேண்டும். நன்காவதாக, ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி உண்மையான பலதரப்புவாதத்தைக் கூட்டாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author