கோட்பாட்டில் ஊன்றி நின்று, பேச்சுவார்த்தையை முன்னேற்ற வேண்டும்:சீன வணிக அமைச்சகம்

20 நாடுகள் குழுவின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் பற்றி சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் 4ஆம் நாள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது கூறுகையில், தானியத்தை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை எதிர்ப்பது, மிதமிஞ்சிய உற்பத்தித் திறனைச் சமாளிப்பது, கட்டாய உழைப்பை ஒழிப்பது, அதிக முன்னுரிமையுடன் கூடிய நாட்டு நடப்பு முறையை சரிப்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி இக்கூட்டத்தில் உறுப்பு நாடுகள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, தானிய பிரச்சினைக்கான தீர்வு பற்றிய கூட்டறிக்கையை வெளியிட்டனர் என்று கூறினார். இக்கூட்டத்தின் போது, மிதமிஞ்சிய உற்பத்தித் திறன், கட்டாய உழைப்பு முதலியவை பற்றி அதிக கருத்து வேற்றுமைகள் உள்ளன. நடப்பு தலைவர் நாடு மற்றும் பல்வேறு உறுப்பு நாடுகளுடன் கூட்டாகப் பாடுபட்டு, ஒற்றுமையுடன் ஒத்துழைத்து, விரைவில் நடைபெறவுள்ள 20 நாடுகளின் மயாமி உச்சி மாநாட்டுக்கு ஆக்கப்பூர்வமான, பயனுள்ள பொருளாதார மற்றும் வர்த்தக சாதனைகளைக் கூட்டாக வழங்க சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author