ஜென்டில்மேன் ஒப்பந்தம்”மறுத்த பிலிப்பைன்ஸ் மீது நம்பகத்தன்மை இல்லை

2022ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸின் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை, தென் சீனக் கடல் தகராறு குறித்து சீனாவுடன் எந்த உள் உடன்படிக்கையையும் உருவாக்கியது பற்றி பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரியவில்லை.

சீனாவுடன் எந்த உடன்படிக்கை எட்டவில்லை என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் கில்பெர்டோ தியோடரோ 27ஆம் நாள் அறிவித்தார். பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் மார்க்கோசு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அனோ முதலியோருக்கு அடுத்தபடியாக, ரெனாய் பாறைகள் குறித்து சீன-பிலிப்பைன்ஸ் இடையே எட்டப்பட்ட “ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை” பிலிப்பைன்ஸ் தரப்பு மீண்டும் வெளிப்படையாக மறுத்துள்ளது.


பிலிப்பைன்ஸின் டுடெர்டே அரசுக் காலத்தில், தென் சீனக் கடல் நிலைமையை நிதானப்படுத்தும் வகையில், சீனாவும் பிலிப்பைன்ஸும் ரெனாய் பாறைகள் குறித்து “ஜென்டில்மேன் ஒப்பந்தம்” ஒன்றை உருவாக்கின. 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம், தற்போதைய பிலிப்பைன்ஸ் அரசு ஆட்சிக்கு வந்தது முதல், 2023ஆம் ஆண்டு பிப்ரவரியின் துவக்கம் வரை, இரு தரப்புகளின் தொடர்புடைய வாரியங்களும் அமைப்புகளும் இவ்வுடன்படிக்கையைப் பின்பற்றியுள்ளன. மேலும், இவ்வுடன்படிக்கையின் தொடர்புடைய விவகாரங்களைச் சீனா பிலிப்பைன்ஸ் அரசின் உயர்நிலையுடன் பன்முறையாகத் தொடர்பு கொண்டு பரிமாறிக் கொண்டுள்ளது.


முன்னாள் அரசு சீனாவுடன் “ஜென்டில்மேன் ஒப்பந்தத்தை” உருவாக்கியது குறித்து தெரியாது என்று அறிவித்த பிலிப்பைன்ஸ் அரசு ஊமை விளையாட்டு தெளிவாக உள்ளது. தன் சொல்லுக்குப் புறம்பாகச் செயல்படும் பிலிப்பைன்ஸ் அரசின் மீது நம்பகத்தன்மை இல்லை என்றும், அரசியல் மற்றும் தூதாண்மை நிர்வாகத்தில் குழப்பம் என்பது அதன் இயல்பு நிலைமையாகும் என்றும் பிலிப்பைன்ஸ் அரசின் இச்செயல் மூலம் வெளியுலகத்துக்குத் தெளிவாகக் காணப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author