20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி 4ஆம் நாள் ஜப்பானின் நகோயா நகரில் நிறைவடைந்தது. 169 தங்கப் பதக்கங்கள், 89 வெள்ளிப் பதக்கங்கள், 83 வெண்கலப் பதக்கங்களுடன், சீன விளையாட்டு வீரர்கள் பிரதிநிதிக் குழு தொடர்ந்து 12ஆம் முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியின் தங்கப் பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்றது. ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் முறையே 2ஆவது, 3ஆவது, 4ஆவது இடத்தில் வகித்தன.
சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைவர் சாங்சின் 4ஆம் நாள் கூறுகையில், நடப்புப் போட்டியில், சீனப் பிரதிநிதிக் குழுவினர்கள் நீர் குதிப்பு, துப்பாக்கிச்சூடு, ஜிம்னாஸ்டிக்ஸ், மேசை பந்து, பூப்பந்து முதலிய போட்டிகளில் தொடர்ந்து முன்னணியில் உள்ளனர். தடகளம், நீச்சல், நீர்விளையாட்டு போட்டிகள், டிராக் சைக்கிளிங் முதலிய பெரிய அடிப்படை போட்டிகளில் அதிக முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
