ஹோர்முஸ் நீரிணையின் திறப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ச்சியன் 15ஆம் நாள் கூறுகையில்,
ஹோர்முஸ் நீரிணை சர்வதேச கப்பல் பயணத்திற்கான முக்கிய நீரிணையாகும். இந்நீரிணை நிலைமையை நிதானப்படுத்துவது, இப்பிரதேச நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நலனுக்கு பொருந்தியது. முதல் கட்ட புரிந்துணர்வு குறிப்பாணையை ஈரானும் அமெரிக்காவும் எட்டியுள்ளன என்பதில் சீனா கவனம் செலுத்துகின்றது. ஹோர்முஸ் நீரிணை வெகுவிரைவில் திறக்கப்படும் என்று சீனா எதிர்பார்க்கின்றது. இது குறித்து, இப்பிரதேச நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் தொடர்பு கொள்ள சீனா விரும்புகின்றது என்றார்.
