பிரதமர் மோடி மற்றும் சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் முன்னிலையில், இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரு நாடுகளின் பிரதிநிதிகள் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தங்கள் இந்தியா – சுவிட்சர்லாந்து இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த சந்திப்பு அமைந்துள்ளது.
