மதுரை நகைக்கடையில் 500 சவரன் நகை கொள்ளை..!!

Estimated read time 0 min read

மதுரை பைபாஸ் பகுதியில் உள்ள டாடாவின் தனிஷ்க் நகைக் கடையில் அதிகாலை 3 மணியளவில், ரூ.50 கோடி மதிப்புள்ள 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை புறவழிச்சாலையில் காளவாசல் பகுதியில் நாட்டின் முன்னணி தொழில் குழுமத்துக்குச் சொந்தமான பிரபல நகைக் கடை அமைந்துள்ளது.இந்த கடை நேற்றிரவு பூட்டப்பட்ட நிலையில், வழக்கம்போல் கடையின் ஊழியர்கள் இன்று காலை திறந்து பார்த்தபோது கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

நேற்றிரவு முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் 500 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக புகார் அளிக்கப்பட்டது.கடையின் பின்புறம் வழியாக நுழைந்த முகமூடி அணிந்த மர்மநபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக புகார்.புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகாரைத் தொடர்ந்து, தனிஷ்க் நகைக் கடைக்குச் சென்ற காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author