தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் ரித்தாலா மெட்ரோ நிலையம் அருகே பெங்காலி பஸ்தி என்ற குடிசைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், சுமார் 400 முதல் 500 தற்காலிக வீடுகள் (குடிசைகள்) எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்து சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு 10:56 மணியளவில் தீ விபத்து குறித்த முதல் தகவல் டெல்லி தீயணைப்புச் சேவைக்கு (DFS) கிடைத்தது.
ஆரம்பத்தில் 15 தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்ட நிலையில், தீயின் தீவிரம் காரணமாக மொத்தம் 29 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
டெல்லி ரோகிணி பகுதியில் பயங்கரத் தீ விபத்து: 500 குடிசைகள் எரிந்து சாம்பல்
